Saturday, September 5, 2009

இந்திய உணவுப் பொருட்களில் ஹலால் முத்திரைக்காக இதோ ஓர் நிறுவனம்


அந்நிறுவனத்தின் அறிக்கை வருமாறு:-

நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர் நிறுவனத்தை இந்திய£வில் தொடங்கியுள்ளோம். அது இந்திய£வில் தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

உலகின் பல நாடுகள் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களை முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பது நடைமுறையாகும்.

ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்திய£வில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்திய முஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltd எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இது இந்திய£வின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும். இந்திய£வின் பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில் தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.

இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர் பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில் பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றை வாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதை
எப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும் துணைசெய்யலாம்.

எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க:-

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !



( ஆக்கம்;- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி )

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும். இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?

டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”
(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.

ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !

ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !

தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.

மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !

இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !

( வஸ்ஸலாம்! )

Friday, September 4, 2009

திருக்குர்ஆன் MP3 டவுன்லோடு


டவுன்லோடு செய்ய "Right Click" செய்து "Save Target as" தேர்ந்து எடுக்கவும்

No.

Sura

No.

Sura

No.

Sura

No.

Sura

No.

Sura

1

Fatiha

25

Furqan

49

Hujurat

73

Muzzamil

97

Qadr

2

Baqarah

26

Shu'araa'

50

Qaf

74

Muddathir

98

Bayyina

3

Aal Imraan

27

Naml

51

Thariyat

75

Qiyama

99

Zalzala

4

Nisaa'

28

Qasas

52

Toor

76

Insaan

100

Aadiyat

5

Ma'idah

29

Ankaboot

53

Najm

77

Mursalat

101

Qari'a

6

An'aam

30

Room

54

Qamar

78

Naba'

102

Takathur

7

A'raf

31

Luqman

55

Rahman

79

Nazi'aat

103

Asr

8

Anfal

32

Sajda

56

Waqi'a

80

Abas

104

Humaza

9

Tawba

33

Ahzab

57

Hadeed

81

Takweer

105

Feel

10

Yunus

34

Saba'

58

Mujadila

82

Infitar

106

Quraysh

11

Hud

35

Fatir

59

Hashr

83

Mutafifeen

107

Ma'oon

12

Yusuf

36

Ya Seen

60

Mumtahana

84

Inshiqaq

108

Kawthar

13

Ra'd

37

Saffaat

61

Saff

85

Burooj

109

Kafiroon

14

Ibrahim

38

Saad

62

Jumu'a

86

Tariq

110

Nasr

15

Hijr

39

Zumar

63

Munafiqoon

87

A'la

111

Masad

16

Nahl

40

Ghafir

64

Taghabon

88

Ghashiya

112

Ikhlas

17

Israa'

41

Fussilat

65

Talaq

89

Fajr

113

Falaq

18

Kahf

42

Shoora

66

Tahreem

90

Balad

114

Naas

19

Mariam

43

Zukhrof

67

Mulk

91

Shams



20

Taha

44

Dukhan

68

Qalam

92

Layl



21

Anbiyaa'

45

Jathiya

69

Haaqa

93

Dhuha



22

Hajj

46

Ahqaf

70

Ma'arij

94

Sharh



23

Mu'minoon

47

Muhammad

71

Nooh

95

Teen



24

Nur

48

Fat'h

72

Jinn

96

Alaq




Sunday, August 23, 2009

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

எழுதியவர் மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி

Article

1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

2. யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை. யாஅல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. நீயே என்னைப் படைத்தாய், நான் உன்னுடைய அடிமை, நான் என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின்படி நிலைத்திருக்கிறேன். நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன். எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. யாஅல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். யாஅல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சொர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

3. தள்ளாத வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! அவைகளின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது! கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அவைகளிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது!

4. யாஅல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விசாலப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு, இழிவு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு, பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும் தலைவனும் நீயே! பயனில்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

5. யாஅல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யாஅல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியம் (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

6. யாஅல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவிற்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

7. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

8. யாஅல்லாஹ்! என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் எனது அரண். எனது உலகை எனக்கு சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம். எனது மறுமையை சீர்படுத்துவாயாக! (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக! அனைத்து தீமைகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! எனக்கு நீ உதவியாக இருப்பாயாக! எனக்கு எதிராக இருக்காதே! எனக்கு நீ உதவி செய்வாயாக! எனக்கு எதிராக உதவி செய்யாதே! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! நேர்வழி பெறும் வழியை எனக்கு இலகுபடுத்துவாயாக!.

9. யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக! என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! என் பாவத்தைப் போக்கி விடுவாயாக! என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! என் நாவை பலப்படுத்துவாயாக! என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.

10. யாஅல்லாஹ்! (சகல) காரியங்களிலும் நிலைத்திருப்பதையும், நேர்வழியில் உறுதியையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். இன்னும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திடவும் உன்னை அழகிய முறையில் வணங்கிடவும் நான் உன்னிடம் கேட்கின்றேன். தூய்மையான உள்ளத்தையும் உண்மை உரைக்கும் நாவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த நலவுகளைக் கேட்கின்றேன். உனக்குத் தெரிந்த (எல்லாப்) பாவங்களிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீயே மறைவானவற்றையெல்லாம் மிகவும் நன்கறிந்தவன்!

11. யாஅல்லாஹ்! எனக்கு நேர்வழியைக் காட்டுவாயாக! என் ஆத்மாவின் கெடுதிகளிலிருந்து என்னைக் காத்தருள்வாயாக! நற்காரியங்களைச் செய்யவும் வெறுக்கத்தக்க காரியங்களை விட்டு ஏழைகளை நேசிக்கும் தன்மையையும் தந்து என் பாவங்களை மன்னித்து எனக்கு அருள்புரியும்படி நான் உன்னிடம் கேட்கின்றேன். உன் அடியார்களை குழப்பத்தில் ஆழ்த்த நீ விரும்பினால், குழப்பத்தில் ஆழ்த்தப்படாத நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்து விடுவாயாக!

12. யாஅல்லாஹ்! உன்னுடைய நேசத்தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் உன் நேசத்தின் பக்கம் என்னைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய எல்லா அமல்களின் நேசத்தைபும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யா அல்லாஹ்! சிறந்த கேள்வியையும் சிறந்த பிரார்த்தனையையும் சிறந்த வெற்றியையும் சிறந்த நன்மையையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! என்னுடைய தராசை (நன்மையால்) கனமாக்கி வைப்பாயாக! என்னுடைய ஈமானை (நம்பிக்கையை) உறுதிப்படுத்துவாயாக! என் அந்தஸ்த்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையையும் இன்னும் (ஏனைய) வணக்கங்களையும் ஏற்றுக் கொள்வாயாக! என் பாவங்களை மன்னித்தருள்வாயாக! சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.

13. நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். நன்மைகளின் ஆரம்ப, முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நான் உன்னிடம் கேட்கின்றேன்.

யாஅல்லாஹ்! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவதையும் என் பாவத்தை மன்னிப்பதையும் நீ என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதையும் என் மர்மஸ்தானத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும் நீ என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

14. யாஅல்லாஹ்! என் பார்வையிலும் கேள்விப்புலனிலும் உடலமைப்பிலும் குணத்திலும் குடும்பத்திலும் உயிர்வாழ்விலும் என்னுடைய அமல்களிலும் நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக! சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்த்துக்களை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

15. யாஅல்லாஹ்! கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும், விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும் தீய முடிவுகளை விட்டும் விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளங்களை புரட்டக்கூடிய அல்லாஹ்வே! உன் மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக! உள்ளங்களை திருப்பக்கூடிய அல்லாஹ்வே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தை திருப்பி விடுவாயாக!.

16. யாஅல்லாஹ்! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு அதிகப்படுத்துவாயாக! எங்களுக்குக் குறைத்துவிடாதே! எங்களை கண்ணியப்படுத்துவாயாக! இழிவு படுத்திவிடாதே! (உனது அருட்கொடைகளை) எங்களுக்குத் தந்தருள்வாயாக! உன் அருளிலிருந்து எங்களை நிராசையற்றவர்களாக ஆக்கிவிடாதே! மற்றவர்களைவிட எங்களுக்கு முன்னுரிமை வழங்குவாயாக! யாஅல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக!

17. யாஅல்லாஹ்! உனக்கு மாறு செய்வதை விட்டும் எங்களை தடுக்கக்கூடிய (உன்னைப்பற்றிய) அச்சத்தையும், உன்னுடைய சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் வழிபாட்டையும், உலகச் சோதனைகளை எளிதாகக் கருதச் செய்யும் உறுதியையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எங்களுடைய செவிப்புலன்களையும், பார்வைகளையும் (உடல்) சக்திகளையும் நீ எங்களை வாழவைக்கும் காலமெல்லாம் எங்களுக்கு இன்பம் தரக்கூடியவைகளாக ஆக்குவாயாக! (குறைவின்றி இயங்கச் செய்வாயாக!) அதனை எங்கள் வாரிசுகளுக்கும் (சந்ததிகளுக்கும்) ஆக்குவாயாக! எங்களுக்கு அநீதம் செய்தவர்களைப் பழி வாங்குவாயாக! எங்கள்மீது விரோதம் கொண்டவர்களுக்குப் பாதகமாக எங்களுக்கு நீ உதவி செய்வாயாக! இவ்வுலகையே எங்கள் நோக்கமாகவும் எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுடைய மார்க்கத்தில் எங்களுக்கு சோதனைகளை ஏற்படுத்திவிடாதே! எங்களின் பாவங்களினால் எங்கள்மீது இரக்கம் காட்டாத, உன்னை பயப்படாதவனை எங்கள் மீது பொறுப்பாளியாக ஆக்கிவிடாதே!

யாஅல்லாஹ்! உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும், உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும் அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும் அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும் சொர்க்கத்தைப்பெற்று, வெற்றிபெற, நரகை விட்டும் ஈடேற்றம்பெற (அருள் புரியுமாறும்) நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

18. யாஅல்லாஹ்! எங்களின் பாவங்களை நீ மன்னிக்காமல் விட்டுவிடாதே! குறைகளை மறைக்காமல் விட்டுவிடாதே! கவலையைப் போக்காமல் விட்டுவிடாதே! கடனை அடைக்காமல் விட்டுவிடாதே! அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! உலக மற்றும் மறுமையின் தேவைகளில் அதில் உனக்கு பொருத்தமும் எங்களுக்கு வெற்றியுமுள்ள எத்தேவைகளையும் எங்களுக்கு நிறைவேற்றாமல் விட்டுவிடாதே!

19. யாஅல்லாஹ்! உன்னிடமிருந்து அருளை நிச்சயமாக நான் கேட்கின்றேன். அதனைக் கொண்டே என் உள்ளத்திற்கு நீ நேர்வழி காட்டுகின்றாய். என் காரியங்கள் அனைத்தையும் அதனைக் கொண்டே நீ ஒன்று சேர்க்கின்றாய். என்னுடைய பிரிவினையை அதைக் கொண்டே நீ சீர்படுத்துகின்றாய். என்னுடைய மறைவான விஷயங்களை அதைக்கொண்டே நீ பாதுகாக்கின்றாய். என்னுடைய வெளிப்படையானவைகளையும் அதைக் கொண்டே நீ உயர்த்துகின்றாய். அதைக்கொண்டே (மறுமையில்) என்னுடைய முகத்தை நீ வெண்மைப்படுத்துகின்றாய். அதைக் கொண்டே என்னுடைய அமல்களையும் நீ தூய்மையாக்குகின்றாய். அதைக் கொண்டே எனக்கு நேர்வழியையும் நீ காட்டுகின்றாய். அதைக் கொண்டே குழப்பங்களை என்னைவிட்டும் நீ அகற்றுகின்றாய். அதைக் கொண்டே எல்லாக் கெடுதிகளிலிருந்தும் நீ என்னைப் பாதுகாப்பாயே அப்படிப்பட்ட அருளை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

20. யாஅல்லாஹ்! தீர்ப்பு நாளில் வெற்றியையும் நற்பாக்கியம் உள்ளவர்களின் வாழ்க்கையையும் ஷுஹதாக்களின் அந்தஸ்தையும் நபிமார்களுடன் சேர்ந்திருப்பதையும் எதிரிகளுக்கு எதிராக எனக்கு உதவி கிடைப்பதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

21. யாஅல்லாஹ்! ஈமானில் உறுதியையும் நல்லொழுக்கத்தில் உறுதியையும் வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் உன்னிடமிருந்து அருளையும் நற்பாக்கியங்களையும் பிழை பொறுப்பையும் திருப்பொருத்தத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.

யாஅல்லாஹ்! ஆரோக்கியத்தையும் பத்தினித் தனத்தையும் நற்குணத்தையும் விதியை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என் ஆத்மாவின் கெடுதியிலிருந்தும் இன்னும் உன் ஆதிக்கத்திலுள்ள ஒவ்வொரு மிருகத்தின் கெடுதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.

யாஅல்லாஹ்! என் பேச்சை நீ கேட்கின்றாய். என் நிலையினை நீ பார்க்கின்றாய். என் இரகசியத்தையும் பரமரகசியத்தையும் நீ அறிந்திருக்கின்றாய். என் காரியத்தில் எதுவும் உன்னிடம் மறைந்ததாக இல்லை! நான் ஒன்றுமில்லாத ஏழை! இரட்சிப்புத் தேடுபவன்! அபயம் தேடுபவன்! இரக்கத்தன்மையுள்ள, இலகிய உள்ளமுள்ள, செய்த பாவங்களை உன்னிடம் மனப்பூர்வமாய் ஏற்றுக் கொள்பவன், ஏழையின் வேண்டுகோளாக உன்னிடம் வேண்டுகிறேன். பணிந்த நிலையில் மண்டிடும் பாவியின் மன்றாடுதலாக மன்றாடுகின்றேன். உள்ளம் பயந்த நிலையில் பிரார்த்திப்பவரின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன். பிடரியை உனக்கு பணியவைத்து, உடம்பையும் பணியவைத்து, முகத்தையும் மண்ணில் படியவைத்து பயந்த நிலையில் பிரார்த்திப்பவனின் பிரார்த்தனையாக நான் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்.

courtesy:

Linked to IslamKalvi.com